வழமையாக 14 வயது மாணவர்கள் பாடசாலையில் மதிய உணவுவேளையில், உதைபந்தாட்டம் விளையாடுவார்கள். ஆனால் கனடா மென்றியலில் உள்ள 2 மாணவர்கள் நேரம் போகவில்லை என்று (ATM) ஏ.ரி.எம் மெஷினுடன் விளையாடியுள்ளார்கள்.
அதாவது அவர்கள் தமது ஐ.ரி பாட நேரத்தில், ஒரு இணையத்தில் ஏ.ரி.எம் இயந்திரம் தொடர்பாக சில விடையங்களைப் பார்த்துள்ளார்கள். அதே இணையத்தில் ஏ.ரி.எம் இயந்திரத்தை எப்படி இயக்குவது, ஆட்மின் பாஸ்வேட்டை எப்படி போடுவது என்று, ஒரு கட்டுரை இருந்துள்ளது. போதாக்குறைக்கு ஏ.ரி,எம் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற “மனுவல் புத்தகம்” கூட ஆன் லைனில் இருந்துள்ளது. இதனை நன்றாக வாசித்த அந்த இரண்டு 14 வயது சிறுவர்களும், அருகில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரம் உள்ள இடத்திற்கு சென்றுள்ளார்கள்.
அவர்கள் சிறிது நேரத்தில் எல்லாம், அந்த ஏ.ரி.எம் இயந்திரத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார்கள். காசை எடுக்க முடியவில்லை என்றாலும், தற்போது அந்த இயந்திரத்தினுள் எவ்வளவு பணம் உள்ளது, எத்தனைபேர் காசை வெளியே எடுத்துள்ளார்கள், ஒரு தரம் காசை எடுக்க எவ்வளவு சார்ஜ் செய்கிறது ? அதனை எவ்வாறு குறைப்பது அல்லது கூட்டுவது என்று எல்லாம் கண்டுபிடித்துவிட்டார்கள்.
மேலும் நாம் புதிதாக சென்று அந்த இயந்திரத்தினுள் எமது அட்டையை விட்டவுடன், வெல்-கம் மெசேஜ் சொல்லும் அல்லவா ? அதனைக் கூட அவர்கள் மாற்றி விட்டார்கள். இவ்வளவையும் செய்து பார்த்துவிட்டு , அருகில் உள்ள வங்கிக்குச் சென்று தாம் அவர்களில் ஏ.ரி.எம் இயந்திரத்தை ஹக் செய்துவிட்டதாக வங்கியின் மேனேஜரிடம் கூறியுள்ளார்கள். அட போங்க போய் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று மேனேஜர் கூறியுள்ளார். அவர் முதலில் நம்பவில்லையாம். ஆனால் அவர்கள் மேனேஜரை அழைத்துச் சென்று தாம் கண்டுபிடித்ததை செய்து காட்டியுள்ளார்கள். திண்டாடிப்போன அவர் என்ன செய்வது என்று தெரியாது திகைத்துப்போயுள்ளார்.
















