எனக்கு பத்து வயதில் மகன் இருப்பது உண்மைதான். பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சித்தார்த்

samantha-sidarthபாய்ஸ் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த நடிகர் சித்தார்த் குறித்த வதந்திகள் சமீபகாலமாக பெரும் அளவில் பரவி வருகிறது. அவருக்கும் சமந்தாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதென்றும், சித்தார்த்துக்கும் அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்கு தற்போது 10 வயது ஆகிறது என்றும் பல வதந்திகள் பரவி வந்தன. இவற்றையெல்லாம் பொறுமையாக சித்தார்த் மறுத்து வந்தார்.

தற்போது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கும் சமந்தாவிற்கும் நட்பை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும், எனக்கு திருமணம் இன்னும் நடக்கவில்லை, அப்படி நடந்தால் கண்டிப்பாக பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர் 10 வயது மகன் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சித்தார்த், “ஆமாம் எனக்கு பத்து வயதில் மகன் இருப்பது உண்மைதான். அந்த மகனின் பெயர் மெளக்லி என்று கூறிய சித்தார்த், ஒரு நாயை பத்திரிகையாளர்களிடம் காட்டினார்.

இந்த நாய் அனாதையாக தெருவில் இருந்தது. அதை வீட்டிற்கு அழைத்து வந்து எனது மகன் போல் வளர்த்து வருகிறேன். இவனைத்தவிர எனக்கு வேறு எந்த மகனும் இல்லை என்று கூறினார். பத்திரிகையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உறுதிசெய்யப்பட்ட செய்தியை மட்டுமே வெளியிடுமாறும், பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags: , ,

Leave a Reply