மோடி அரசில் கேபினட் மினிஸ்டராக மாறுகிறார் பவர்ஸ்டார். திரையுலகம் அதிர்ச்சி.

pawankalyan-ministerசமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி அமர்வதற்கு ஒருவகையில் இந்தியாவில் பிரபலமாக உள்ள திரையுலக நட்சத்திரங்களும் ஒரு காரணம்.

வடக்கே அமிதாப்பச்சன், ஷாருக்கான் முதல் தெற்கே ரஜினிகாந்த், விஜய், பவன்கல்யாண் வரை மோடி அரசுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படையாகவும், மறைமுகவும் கொடுத்தனர். குறிப்பாக ஆந்திராவில் பாரதிய ஜனதா -தெலுங்கு தேச கூட்டணி அபார வெற்றியடைவதற்கு பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவன்கல்யாணின் பணி குறிப்பிடத்தக்கது என பாஜக கட்சியினர் உணர்ந்துள்ளனர்.

இதற்கு நன்றிக்கடனாக பவர்ஸ்டார் பவன்கல்யாணுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்து கேபினட் அந்தஸ்தில் மந்திரி பதவியும் கொடுக்க பிரதமர் முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் ஒரு நடிகர் மத்திய மந்திரியாவது இதுதான் முதல்முறை என்பது ஆந்திர திரையுலகம் பவர்ஸ்டாரின் அபார வளர்ச்சியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply