அமெரிக்காவில் உள்ள மத்திய டெக்சாஸ் மாகாணத்தின் ஒரு பகுதியான McLennan County என்ற பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஆறு பேர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆறு பேர்களுக்கும் சேர்த்து 1600 வருடங்கள் சிறைத்தண்டனை அளித்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
McLennan Countyஎன்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் Waco High School என்ற பள்ளிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பள்ளியிலேயே படிக்கும் Douglas Demond Canada என்ற 19 வயது மாணவரும், Da’Juan Oshea Degrate என்ற 18 வயது மாணவரும் சேர்ந்து அந்த சிறுமியை தங்கள் இருப்பிடத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களுடைய இருப்பிடத்தில் Devoric Javon Evans, வயது 20; Lamont Tray Davis, வயது 19; Day’tron Derrell Smith, வயது 18; மற்றும் Cory Darnell Hall, வயது 18 ஆகிய நான்கு பேர்கள் இருப்பதை பார்த்ததும் விபரீதத்தை உணர்ந்து அந்த சிறுமி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை அந்த ஆறு நபர்களும் மாறி மாறி பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் $5 பணம் கொடுத்து பள்ளிக்கு செல்லுமாறு அனுப்பி விட்டனர்.
நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே அந்த சிறுமி அருகில் உள்ள காவல்நிலையத்தில் கூறினார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த ஆறு இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆறு பேர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, ஆறு நபர்களுக்கு சேர்த்து 1600 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.
















