அமெரிக்க பெண் வாங்கிய பர்கரில் பிளேடு. பெரும் சிக்கலில் பர்கர் நிறுவனம்

burger-usaதென்மேற்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் உள்ள Flagstaff என்ற நகரில் உள்ள ஒரு கடையில் தனது கணவருக்கு பெண் ஒருவர் வாங்கிய பர்கரில் பிளேடு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரிசோனா மாகாணாத்தை சேர்ந்த Jennifer Ashley என்ற பெண் Flagstaff நகரில் உள்ள பர்கர் கிங் என்ற கடையில் பர்கர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு தனது கணவருக்கு ஒரு பர்கர் பார்சல் வாங்கினார். தான் வாங்கிய பர்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் ஒரு பிளேடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பர்கர் கிங் மேனேஜரை அழைத்து தான் சாப்பிடும் பர்கரில் பிளேடு இருந்ததாகவும், இந்த விஷயத்தை தான் சும்மா விடப்போவதில்லை என்றும் மிரட்டினார்.

பர்கர் கிங் நிறுவன நிர்வாகிகள் எவ்வளவோ சமாதானம் கூறியும் அவர் அதை ஏற்கவில்லை. பர்கர் கிங் ஊழியர் ஒருவர் செல்ப் மேல் பிளேடு ஒன்றை வைத்திருந்ததாகவும், அது தவறி தயாராகிக்கொண்டிருந்த பர்கரின் மேல் விழுந்திருப்பதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

Jennifer Ashley அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு போதுமான நஷ்ட ஈடு தரவும் நிறுவனம் ஒப்புக்கொண்ட போதிலும், அவர் அந்த நஷ்ட ஈடை வாங்கவில்லை. இந்த விஷயத்தை தான் கண்டிப்பாக ஊடகங்களின் மத்தியில் கொண்டு செல்ல இருப்பதாகவும், தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் அதனால் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தான் பிரபல பத்திரிகைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு ஆத்திரத்துடன் சென்றுவிட்டார். அவர் கூறியதுபோலவே அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் இந்த செய்தி அன்று மாலையே வந்துவிட்டது. இதனால் பர்கிங் கிங் நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.

Tags: ,

Leave a Reply