யுத்தத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானியா

sexual-violenceயுத்தத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கைக் கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் லண்டனில் யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது.

இந்த பிரகடனத்திற்கு ஆதரவாக உலகின் பெரும்பான்மையான நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாகவும், இலங்கையும் இதில் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது.

யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது,

யுத்த வலயத்தில் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: ,

Leave a Reply