ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – ஜாதிக ஹெல உறுமய

athuraliaஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை இ;ன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ரதன தேரர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply