கிளிநொச்சியில் உள்ள தமிழ் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கிறோம், கோழிப்பண்ணை வைத்து தருகிறோம் என்று சொல்லியே இராணுவத்தினர் மெல்ல மெல்ல அவர்களது அன்றாட வாழ்கையில் தம்மையும் இணைத்து வருகிறார்கள். ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்தைக் கண்டாலே கதி கலங்கி ஓடிய தமிழ்ப் பெண்கள் தற்போது அவர்களுக்கு வெற்றித் திலகமிட்டு வரவேற்கிறார்கள். இது தான் இன்றைய யாதார்த்த நிலையாக உள்ளது.
புலம் பெயர் நாடுகளில் 20,000 ஆயிரம் பவுன்சுகளை செலவழித்து, தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். 1000,000 பவுன்சை செலவழித்து ஆடம்பர கார்களை வாங்குகிறார்கள். இதனை கூட சகித்துக் கொள்ளலாம், நின்றால் பார்டி , இருந்தால் பார்டி என்று எதற்கு எல்லாம் பார்டி வைப்பது என்று தெரியாமல் பார்டி வைத்து காசை கரியாக்குகிறார்கள்.
ஆனால் ஈழத்தில் அல்லலுறும் இவர்கள் போன்ற பெண்களை இனங்கண்டு, இவர்களுக்கு உதவ தமிழர்கள் மறந்துவிட்டார்கள். பல தமிழ் அமைப்புகள் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்தும் என்ன பலன் ? இறுதியாக இவர்களுக்கு உதவுவதாக சிங்களமே தன்னை, காட்டிக்கொள்கிறது. குறுகிய நோக்கத்திற்காக சிங்களவர்கள் இதனைச் செய்கிறார்கள் என்று தெரியாத , இந்த தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தையும் சிங்களவர்களையும் நன்றி உணர்வோடு பார்த்து வருகிறார்கள். இன் நிலை நீடித்தால் என்ன நடக்கும் என்று புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு நறாகவே தெரியும்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தமிழ் பெண்களுக்கு உதவுதாக கூறிக்கொண்டு, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி சென்று சில தையல் இயந்திரங்களை கொடுத்தார்.
















