நீண்ட நாட்களுக்கு முன்னரே ஆப்பிள் நிறுவனம் ஐ-கடிகாரத்தை வெளியிட உள்ளதாக கதைகள் கிளம்பிவிட்டது. அதன் மாதிரி உருவப்படம் கூட, இன்ரர் நெட்டில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. கடந்த வருடம் இந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் இப்படியான ஒரு கடிகாரத்தை தயாரிக்கிறதா ? அல்லது இது ஒரு வெறும் புரளியா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்துவந்தது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனால் பலர் குழப்பத்தில் இருந்தார்கள். பார்க்க மிகவும் அழகாக , மெதுமையாக காட்சி தரும் இந்த ஆப்பிள் கடிகாரம் கிடைக்குமா கிடைக்காதா என்று பலர் ஏங்கி தவித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது. அது என்னவென்றால் ஆப்பிள் நிறுவனம் இந்த கடிகாரத்தை இம்மாதம் முதல் தயாரிக்க ஆரம்பித்துள்ளது என்பது தான். ஜூன் மாதம் முதல் தாய்வானில் உள்ள கம்பெனி ஒன்று இதனை தயாரிக்க ஆரம்பித்துள்ளது என்றும், இதற்கு தேவையான உதிரிப்பாகங்கள் ஸ்வீனட மற்றும் லண்டனில் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருவதாகவும், லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னும் 6 மாதங்களில் இக் கடிகாரம் மார்கெட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிர்றது. ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான ஆப்பிள் ஐ-போன் 6ஐ வெளியிடவுள்ளது. அதன்போது சேர்த்து இந்த ஐ-கடிகாரத்தையும் அவர்கள் சந்தைப்படுத்த உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அதிகூடிய பற்றரி லைஃப் , மற்றும் தொழில் நுட்ப்ப வச்திகளோடு ஆப்பிள் ஐ-கடிகாரம் வெளியாக உள்ளது.
















