பார்முலா -1 சாம்பியன் மைக்கேல் சூமாக்கர் கோமாவிலிருந்து மீண்டார்

schuhmacherஜெர்மனி நாட்டைச் சேரந்த பார்முலா-1 கார் பந்தய வீரர் மைக்கல் சூமேக்கர் கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளார்.

பார்முலா-1 கார் பந்தய வீரர் மைக்கல் சூமேக்கர், கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி, ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டிபோது விபத்துககு உள்ளானார்.

இதையடுத்து அவர் கோமா நிலைக்குச் சென்றார். பின்னர் அவர் பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் 7 ஆம் தேதி உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்தார்.

தொடர்ந்து 6 மாதம், கோமா நிலையில் இருந்த பார்முலா-1 பந்தைய வீரர் மைக்கல் சூமாக்கர், கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளார் என்று அவரது செய்தி தொடர்பாளர் சபீனா கெம் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையிலிருந்து சூமாக்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் முழு உடல் நலமும் தேறி வெளியில் வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply