களுத்துறை, அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் குறித்து நவநீதம்பிள்ளை பெரும் அதிர்ச்சி

navanethem-pillay2களுத்துறை, அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வன்செயலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த சூழ்நிலையில் வெறுப்பை உருவாக்கும் பேச்சை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

ஏனைய முஸ்லிம் மக்கள் இருக்கும் இடங்களுக்கும் இந்தமாதிரி வன்செயல்கள் பரவலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளதுடன் இந்தச் சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply