நிர்வாணமாக சைக்கிளில் ஓர் உலா. (படங்கள்)

cycle_rally_002மெக்சிகோவில் கார் சவாரியை விட சைக்கிள் சவாரியே சிறந்தது என்பதை வலியுறுத்தி நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. வலியுறுத்தவும், சைக்கிள் சவாரியை ஊக்கப்படுத்தும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் நிர்வாண சைக்கிள் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

இந்த நிர்வாண சைக்கிள் ஊர்வலம் 11வது ஆண்டாக, இங்கிலாந்தின் மான்செஸ்டர், பிரைட்டன், அமெரிக்காவின் போர்ட்லேண்ட், ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் கிரீஸ் நாட்டின் தெசலோனிகி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டும் நடத்தப்பட்டது. போர்ட்லாண்டில் நடந்த ஊர்வலத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அங்குள்ள பல்வேறு வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் பெரும்பாலானோர் முழுநிர்வாணமாக சென்றனர். இதைப்போல மான்செஸ்டரில் நடந்த ஊர்வலத்தில் 200–க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டின் நிர்வாண சைக்கிள் ஊர்வலம் அமெரிக்காவின் 75–க்கும் அதிகமான நகரங்களிலும், 20 நாடுகளிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply