இளம் குடும்பப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்த காதலனை காளி ஆடிப் பழிவாங்கிய யுவதி

loversதனது காதலன் இன்னொரு குடும்பப் பெண்ணுடன் கள்ள உறவு இருப்பதை அறிந்த யுவதி ஒருவர் காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கியுள்ளார்.dg

வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் இச் சம்பவம் கடந்த வெள்ளியன்று இடம்பெற்றுள்ளது. ஆழியவளையைச் சேர்ந்த யுவதிக்கும் அந்த யுவதியின் பக்கத்து வீட்டு இளைஞனுக்கும் இடையே காதல் தொடர்பு இருந்துள்ளது. யுவதியும் இளைஞனும் அப்பகுதியின் மறைவான இடத்தில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இளைஞன் அப்பகுதியில் உள்ள இரும்புப் பொருட்கள் சேகரித்தும் சில வேளை அருகில் உள்ள கிராமங்களில் இரும்புப் பொருட்களைக் களவெடுத்தும் விற்றுவந்துள்ளார். இதே நேரம் இயக்கச்சிப் பகுதியில் உள்ள திரயாய் அம்மன் கோவில் உண்டியலையும் இளைஞன் உடைத்து பணம் திருடியுள்ளார். இச் சம்பவம் யுவதிக்குத் தெரிந்து தனது காதலனான இளைஞனை கடுமையான முறையில் எச்சரித்துள்ளார்.
gd

இதே நேரம் குறித்த இளைஞனுக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்ப்ப பெண் ஒருவருக்கும் கள்ள உறவு இருப்பதை யுவதி நேரடியாக அவதானித்ததாகத் தெரியவருகின்றது. தாம் மறைவாகச் சந்திக்கும் இடத்தில் குறித்த பெண்ணுடன் இளைஞன் இருந்ததை அவதானித்த யுவதி அங்கு இளைஞனுடன் சண்டையிட்டதாகவும் இதன் பின்னர் இது தொடர்பாக தனது நெருங்கிய நண்பிக்குத் தெரிவித்து இளைஞனை சரியான முறையில் தண்டிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.d

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யுவதி திடீரென தலையை விரித்து காளியாட்டம் ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. யுவதியின் வீட்டுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்து குவிந்து நின்றுள்ளனர். இதே வேளை யுவதியின் நிலையைப் பார்ப்பதற்காக யுவதியின் காதலனான கள்வனும் வந்துள்ளார்.sds

உடனே ஓடிச் சென்ற யுவதி தனது காதலனின் தலையைப் பிடித்து இழுத்து கோயில் உண்டியல் களவெடுத்த விடயத்தையும் குடும்பப் பெண்ணுடன் தொடர்பு பட்ட விடயத்தையும் அங்குள்ளவர்களுக்கு மத்தியில் போட்டுடைத்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இளைஞனைப் பிடித்து விசாரித்த போது உண்மை வெளியானது. உடனடியாக இளைஞன் திருட்டுக் குற்றச்சாட்டில் பளைப் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டார். சாமியாடி கள்வனைக் கண்டு பிடித்துக் கொடுத்த யுவதியை தற்போது மக்கள் கடவுளாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்

Tags: , ,

Leave a Reply