கென்யாவில் முஸ்லீம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒரு அமைப்பு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ரசித்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த 50 அப்பாவி மக்களை சுட்டு கொலை செய்ததால் அந்நாட்டில் பெரும் பதட்டம் நிலவுகிறது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து கென்ய அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
கென்யாவில் Mpeketoni என்ற பகுதியில் நேற்று ஒரு ஷாப்பிங் மாலில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை The al Shabaab group என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் முகமூடி அணிந்து கண்மூடித்தனமாக சுட்டனர்.
இந்த சிதறிய ஓடிய பொதுமக்கள், இடிபாடுகளுக்கிடையே சிக்கியும், குண்டடிபட்டும், சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக கென்ய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதே இஸ்லாமிய அமைப்புதான் கடந்த செப்டம்பர் மாதம் ஷாப்பிங் மாலில் கண்மூடித்தனாக சுட்டு பலரை கொலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா நாட்டுக்கு கென்ய அரசு தனது படைகளை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக The al Shabaab group அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கென்ய அரசு தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
















