முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் முன்னனி நடிகருடன் அருந்ததி நடிகை ஜோடியாக வருகிறார். புத்தரின் பெயரை கொண்ட இயக்குனரின் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இரண்டாவது கதாநாயகி கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்ய சிங்கப்பூர் நடிகர் ஒருவருடன் இயக்குனர் பேசிக்கொண்டிருந்தார். இதை தெரிந்துகொண்ட பிரபல 30 வயது நடிகை ஒருவர், இந்த வாய்ப்பை பெறுவதற்காக இயக்குனருக்கு பெங்களூர் நட்சத்திர ஓட்டலில் விருந்து வைத்து மயக்கி இந்த வாய்ப்பை பெற்றுவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த நடிகையின் வரவால், அருந்ததி நடிகையின் கேரக்டர் டம்மியாக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்ததால், இயக்குனர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் அருந்ததி. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த 30 வயது நம்பர் நடிகை இயக்குனருடன் நெருங்கி பழகிவருவதாக கூறப்படுகிறது
















