பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் 650,000 பாஸ்வேர்டுகளை திருடி வெளிப்படையாக பணம் கேட்டு மிரட்டும் ஒரு ஹேக்கர்ஸ் கும்பல் குறித்த தகவல் வெளியானதால், பிரான்ஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் நிறுவனம் Domino’s Pizza. இந்த நிறுவனம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ரெஸ்டாரெண்ட் மற்றும் பீட்சா கடைகள் நடத்தி வருகின்றன. இந்த நிறுவனத்திற்கு உலகின் பல நாடுகளில் கிளைகள் உள்ளன. அமெரிக்காவின் மிக்சிகன் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கும் இந்த நிறுவனத்தின் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு கிளையில் கம்ப்யூட்டரில் இருந்து ஹேக்கர்கள், இந்த நிறுவனத்தின் ரகசிய தகவல்களை ஹேக் செய்து மிரட்டி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் பதிவு செய்த 650,000 வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டுகளை தாங்கள் ஹேக் செய்திருப்பதாகவும், இரவு 7 மணிக்குள் £23,892 பணம் கொடுக்காவிட்டால் அனைத்து பாஸ்வேர்டுகளையும் இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலை தைரியமாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து Domino’s Pizza நிறுவன அதிகாரிகள் காவல்துறையினர்களிடம் புகார் செய்துள்ளனர்.
650,000 வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டுகள் மட்டுமின்றி அவர்களுடைய இமெயில்,போன் நம்பர், முகவரி ஆகியவைகளும் சேர்த்து ஹேக் செய்யப்பட்டிருப்பதால் Domino’s Pizza நிறுவனம் பெரும் பதட்டம் அடைந்துள்ளது. இந்த முகவரிகள் அனைத்தும் போட்டி நிறுவனங்களின் கைக்கு சென்றால், இந்நிறுவனத்தின் வியாபாரம் பெருமளவு பாதிக்கும் என கூறப்படுகிறது. எனவே Domino’s Pizza நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் உடனடியாக பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
















