முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்.

Police_curfew_impos_Aluthgama_1662014_6(1)பொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பௌத்த பயங்கரவாத அமைப்புகளில் தாக்குதல்கள் காரணமாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் நாட்டில் சில இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. பதுளையில் இன்று அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதுடன் இதுவரை உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை.

பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ஷவினரின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடி வரும் வேளைகளில் மக்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த அமைப்பை ராஜபக்ஷவினர் பயன்படுத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் தற்போது அந்த அமைப்பு கட்டுப்படுத்த முடியாதளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அளுத்கமவில் நேற்று மோதல்கள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுசரணை வழங்கிய காவிய அணிந்த ஞானசார என்ற நபர் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார். தெஹிவளை பிரதேசத்தில் நேற்றிரவு மருந்தகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது ஞானசாரவும் அவரது காடையர்களும் மகரகம பிரதேசத்தில் ஓரிடத்தில் நிலை கொண்டிருந்தாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

Tags: , ,

Leave a Reply