சகல இலங்கையர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்தவற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவர் மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மதங்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு அமைவாக சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து கவனம செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















