அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகின்றது – ரணில்

ranilஅரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் பேருவளை, அலுத்கம சம்பவம் தொடர்பில் விசேட உரையாற்றிய போது அவர், இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி பொதுபல சேனா இயக்கத்தினால் ஆற்றப்பட்ட இனவாத உரைகளினாலேயே கலவரம் வெடித்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு முயற்சிக்காது அரசாங்கம் அதனை தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளதாக ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களை தடுத்து நிறுத்த துரித கதியில் நீதிமன்றில் தடை உத்தரவினை பெற்றுக் கொள்ளும் அசராங்கம், அலுத்கமவில் பொதுபல சேனா நடத்திய போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மிக அமைதியான முறையில் சில தரப்பினர் குற்றச் செயல்களில் ஈடுபட அனுமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply