மேற்குலகத்தின் சதிகளே வன்முறையின் பின்னணி – விமல் வீரவன்ஸ

vimal veerawansaபெளத்த அடிப்படைவாதத்தை நோர்வேயும் முஸ்லிம் அடிப்படை வாதத்தை சவூதி அரேபியாவும் தூண்டிவிட்டு முஸ்லிம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு சிறுபான்மையினரின் ஒரு வாக்கேனும் கிடைக்காமல் செய்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் காய்நகர்த்தலில் அமெரிக்கா ஈடுபடுகின்றது இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் கதைபுனைந்தார் அமைச்சர் விமல் வீரவன்ஸ.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என வலியுறுத்தும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கையில் ரத்துபஸ்வல சம்பவம் உள்ளிட்ட சிறு சிறு சம்பவங்கள் குறித்தும் இலங்கையில், குடும்ப ஆட்சி இடம்பெறுகிறதா? அல்லது மக்கள் ஆட்சி இடம்பெறுகிறதா? என்று ஆராய வேண்டிய தேவை ஐ.நாவுக்கு இல்லை.

அதற்காக சர்வதேச விசாரணைக் குழுவை இலங்கைக்கு அனுப்பத் திட்டமிடவும் இல்லை. மாறாக இறுதிப் போரில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஆராயவே விசாரணைக்குழுவை ஐ.நா இலங்கைக்குள் அனுப்பவுள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. சர்வதேச விசாரணைக் குழுவை எதிர்ப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களும் எதிர்க்க வேண்டும். இதுவிடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் முதுகெலும்புடன் செயற்படுவார் என நான் எதிர்ப்பார்க்கிறேன்”‡ என்று அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply