உத்திரபிரதேசத்தில் இளம்பெண்ணை சகோதரர்களே தீயிட்டு கவுரவக் கொலைக்கு முயன்றுள்ள செய்தி பெரும் அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சபப்பூர் கிராமத்தில் இளம் பெண் ஒருவரின் உடல் கருகிய நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்டு, பின்னர் உடல் எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்த பொலிஸ் விசாரணையில், 17 வயதாகும் அந்த பெண் கடந்த 14ம் திகதி வாலிபர் ஒருவருடன் ஓடி விட்டதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.
இதை அறிந்த அவரது மூன்று சகோதரர்களும், வாலிபருடன் இளம்பெண் ஓடியதால் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கூறி அவளை சுட்டுக் கொன்றுள்ளனர்.
பின்னர் இளம்பெண்ணின் பிணத்தை தீயிட்டு எரித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, அதற்குள் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
















