கோலிவுட் தடை விதித்தாலும் பரவாயில்லை. களஞ்சியம் படத்தில் நடிக்க முடியாது. அஞ்சலி அதிரடி

Anjali2இயக்குனர் களஞ்சியம் இயக்கி வரும் ‘ஊர் சுற்றிப்புராணம்” படத்தில் அஞ்சலி திடீரென நடிக்க மறுத்ததால் அவர் இயக்குனர் சங்கத்தில் புகார் கூறியுள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களில் அஞ்சலி நடிக்கக்கூடாது என அவருக்கு இயக்குனர் சங்கம் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன், ‘தமிழ்த்திரையுலகில் யாருக்கும் இதுவரை தடை விதித்தது இல்லை. எந்த நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்வது இயக்குனர் மட்டுமே. இதில் வேறு யாரும் தலையிட முடியாது. அதே நேரத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென விலகி, இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஏற்படுத்துபவர்களை விட்டுவிட முடியாது. இதுகுறித்து அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் அஞ்சலியின் தரப்பிடம் விசாரித்தபோது, “தமிழ் திரையுலகம் தடை விதித்தாலும் பரவாயில்லை. களஞ்சியம் படத்தில் அஞ்சலி இனி நடிப்பதாக இல்லை என்றும், அந்த அளவுக்கு அஞ்சலியை அவர் டார்ச்சர் செய்துள்ளதால் அவர் மனம் நொந்துபோய் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அஞ்சலியை சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அஞ்சலி, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply