ஐ.நா உதவிச்செயலர் நாளை இலங்கை விஜயம்: அளுத்கம விவகாரம் குறித்தும் பேசுவார்?

UN-Assistant-Secretary-aluthkamaஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழுவு இலங்கைக்குள் அனுமதிப்பதா? இல்லையா என நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் நாளை ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதெனத் தெரியவருகிறது.
எனினும், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்காக வரும் இவர், அளுத்கம, பேருவளை வன்முறைகள் தொடர்பாக கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளிப்பதா என்று இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முதல் நடந்து வரும் விவாதத்தின் முடிவில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்தப் பின்னணியில், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவில் பணியாற்றும் தெற்காசியாவுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அதுல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Tags: , ,

Leave a Reply