என்ட செல்லமெல்லே… என்ட குட்டியெல்லே.. என்ட கண்ணுள்ளே… கொஞ்சி விளையாடும் சீவீகே!

sivaganamதவிசாளர் சீ.வீ.கே.சிவஞானத்தின் தொலைபேசி அழைப்புகள்!

மாகாணசபை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் சலுகைகள் பலவற்றில், அவர்கள் தமது தொலைபேசி பாவனை கொடுப்பணவாக மட்டும், மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் (10,000) பணத்தை பெற்றுக்கொள்கின்றனர் என்றும்,

ஆனால் மாகாணசபை உறுப்பினர்களில் பலர், மக்கள் ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்புகளுக்கு Answer Mode கொடுத்துப்பேசி விட்டு, மாதாந்தம் தொலைபேசி கொடுப்பணவாக வழங்கப்படும் பத்தாயிரம் ரூபாவையும் பத்திரப்படுத்திக்கொள்கின்றனர் என்றும் நேற்றைய செய்தியறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா.

இவர்களில் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், தனக்கு தொலைபேசி பாவனை கொடுப்பணவாக மாதாந்தம் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபாவை, எதற்கு பயன்படுத்துகிறார்? என்றும் நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

விளக்கெரிக்க போகாதேங்கோ… போகாதேங்கோ…!

கடந்த மே மாதம் 16,17,18 இம் மூன்று நாட்களும் முள்ளிவாய்க்கால் துயர் ஏந்தி வடமாகாணசபையில் விளக்கேற்றப்படும் என்று சிவாஜிலிங்கம் அறிவித்து விட்டு, 16ம் திகதி அன்று அவரும் அனந்தியும் விளக்கெரிக்க சென்ற போது, மாகாணசபையின் நுழைவாயில் கதவுகளை சிறீலங்கா பொலிஸார் இழுத்து பூட்டி அவர்கள் இருவரையும் உட்பிரவேசிக்க விடாமல் தடுத்ததும், பின்னர் அவர்கள் இருவரும் நுழைவாயிலுக்கு முன்பாக விளக்கேற்றியதும், அத்தீச்சுடரை உலக அசிங்கத்தின் ஊத்த பயல்கள் காலால் உதைத்து வீழ்த்தி தமது வன்மத்தை கொட்டித்தீர்த்ததும் யாவரும் அறிந்ததே.

கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் எவ்வித மாகாணசபை அமர்வுகளும் இடம்பெறாது என்பதால், சிவாஜிலிங்கம் யாழ் ஊடக மையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, குறித்த மூன்று நாட்கள் நினைவேந்தல் முடிவை அறிவித்திருந்தார்.

ஊடகங்கள் வாயிலாக இச்செய்தி அனைத்து மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சென்றடைந்திருந்தாலும், முடிந்தவரை அனைத்து மாகாணசபை உறுப்பினர்களுக்கும், அவர் தொலைபேசி மூலமும் அறிவித்திருக்கிறார்.

ஆனால் விளக்கெரிக்கப்பட்ட 16ம் திகதி அன்று அனந்தியையும், சிவாஜியையும் தவிர, ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்கள் எவரும் அன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளாமல் ஓடி ஒழித்துக்கொண்டார்கள்.

இதனால் விசனமும் கோபமும் அடைந்த தமிழ் மக்களின் சார்பில் அச்செயலை கண்டித்து, கூட்டமைப்பின் ஏனைய ஆண் மாகாணசபை உறுப்பினர்களை, “பெண்களின் சீலையை வாங்கி கட்டுங்கள். அப்போதாவது ரோசம் வரட்டும்” என்று ஊடகங்கள் பலவும் கேட்டுக்கொண்டன.

உண்மையில் நடந்தது என்ன?

சிவாஜி தொலைபேசியில் யார் யாருக்கெல்லாம் அழைத்து நினைவேந்தலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாரோ, அவர்களுக்கெல்லாம் சீ.வீ.கே.சிவஞானம் தொலைபேசி அழைப்பெடுத்து நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அழுத்த திருத்தமாக வலியுறுத்தியுள்ளார்.

ஒரு சில உறுப்பினர்கள் இது எச்சரிக்கையா? கட்டளையா? என்று கேட்டதற்கு. “உங்கட நல்லதுக்காகத்தான் சொல்லுறன். நீங்க எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கலாம். சிவாஜிலிங்கம் கைது செய்யப்படுறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. சிக்கல்ல போய் விழுந்திற வேணாம்.” என்றும், மாகாணசபை உறுப்பினர்களின் வயிற்றில் புளியைக்கரைத்து புரளியை பரப்பியுள்ளார்.

மே16 அன்று மாகாணசபைக்கு முன்னால், சிங்களம் செய்தது உலக அசிங்கத்தின் ஊத்த வேலை என்றால், சிவஞானத்தின் இத்தகைய உலுத்தல் வேலைகளை வேறு எப்படிச்சொல்லப்போகின்றீர்கள்?

தவிசாளர் பதவி வரமா? பிச்சையா?

மே18 க்குப்பின்னர் ஒருவாரம் கடந்து கூடிய வடமாகாணசபை அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்ற போது, பேரவைச்செயலக கட்டடத்துக்குள் இருந்து கொண்டே, நினைவேந்தலில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டு, “நான் தவிசாளர்” என்ற ஒரே காரணத்துக்காக கலந்து கொள்ள முடியாது” என்று வியாக்கியானமும் வேறு பேசியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தை, வலியை, இழப்பை, இறப்பைச்சொல்லி வாக்குகள் கேட்டதனாலேயே இவர் தவிசாளர் ஆனார் என்பதை மறந்து விட்டு, “தவிசாளர் பதவி” என்பது, ஏதோ கூரையை பிய்த்துக்கொண்டு கடவுள் கொடுத்த வரம் போல, மதி மயங்கி குதிக்கால் நிலத்தில் படாமல் அந்தரத்தில் மிதந்து கற்பனை உலகில் வலம் வருகிறார்.

உண்மையில் “தவிசாளர் பதவி” என்பது, முள்ளிவாய்க்காலில் இறந்த ஆத்மாக்கள் போட்ட பிச்சை என்பது, அடுத்த தேர்தல் வரும் போதே இவருக்கு ஞானம் பிறக்கும்!

என்ட செல்லமெல்லே… என்ட குட்டியெல்லே.. என்ட கண்ணுள்ளே… கொஞ்சி விளையாடும் சீவீகே!

பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரணைகளை, “பேரவை அமர்வுக்கு 10 நாட்களுக்கு முன்னர் இந்த “தவிசாளர் தணிக்கை தாதா”வுக்கு உறுப்பினர்கள் அனுப்பி வைக்க வேண்டும்” எனும், நல்லாட்சிக்கு ஏற்புடையற்றதும், ஜனநாயகத்துக்கு முரணானதுமான விதி வடமாகாணசபையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே.

குறித்த பிரேரணைகளை வரிக்கு வரி நின்று நிதானித்து படித்துப்பார்க்கும் இவர், அதில் மத்திய அரசுக்கு கன்னத்தில் “பளார்” என்று ஓங்கி அரைந்தாற்ப்போல ஏதேனும் பிரேரணைகள் இருந்தால், அப்பிரேரணைகளை “மத்திய அரசின் கன்னத்தில் தடவிக்கொடுத்து கொஞ்சி விளையாடுவது போல” மாற்றி அமைத்து விடுகின்றார்.

மாற்றி அமைக்கப்பட்ட பிரேரணைகளுக்குரிய உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து,

“உங்கட பிரேரணை இருக்கெல்லோ, அத அப்பிடி சேஞ்ச் செஞ்சிருக்கிறன், இத இப்பிடி சேஞ்ச் செஞ்சிருக்கிறன் சரியா. அத அப்பிடி போட்டால்த்தான் நல்லம், இத இப்பிடி போட்டால்த்தான் நல்லம். ஓகே சரி தானே.”

என்று உறுப்பினர்களை சமாதானப்படுத்தும், திருப்திபடுத்தும் வகையிலும், தனது விசமத்தனமான செயல்களை நியாயப்படுத்தும் வகையிலும் அசடு வழிந்து வருகின்றார்.

எமது செய்தித்தளத்தின் வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

Tags: , ,

Leave a Reply