மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை தொலைக்காட்சியில் தூங்காமல் பார்த்த சீன நபர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். இதனால் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த 39 வயது Zhou Meng என்பவர் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்ததும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க தொடங்கிவிடுவாராம். கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்த அவர் சனிக்கிழமையும் வேலைக்கு சென்று வந்தவுடன் உருகுவே மற்றும் கோஸ்டாரிக்கா நாடுகளுக்கு இடையேயான போட்டியை மிகவும் டென்ஷனுடன் பார்த்து வந்துள்ளார்.
உருகுவே வெற்றி பெறும் என நினைத்து டென்ஷனுடன் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த Zhou Meng , கடைசியில் உருகுவே, கோஸ்டாரிக்காவிடம் 1-3 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி, சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே திடீரென மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்ததை மறுநாள் காலையில்தான் அவருடைய வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவரை உடலை பரிசோதனை செய்த மருத்துவர், திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம், மற்றும் தொடர்ந்து தூங்காமல் இருந்ததால் உடலில் ஏற்பட்ட களைப்பு காரணமாகவே அவருடைய உயிர் பிரிந்ததாக கூறினர். சீனாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
















