இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணைக்குழுவினை அனுமதிக்கக் கூடாது, பாராளுமன்றில் தீர்மானம்

Gota-mahindaஇலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை அனுமதிக்கக் கூடாது என பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 144 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றில் இன்றைய தினமும் நேற்றைய தினமும் விவாதம் நடத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து ஒன்பது ஆளும் கட்சி பாராளுமன்ற சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 வாக்குகள் அளிக்கப்பட்டன.

எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் வாக்களித்திருந்தது.

எதிராக பத்து வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பினை புறக்கணிப்பு செய்திருந்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply