ஐ.நா. குழுவுக்கு அனுமதி இல்லை

un-human-rights-council_0இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவ லகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மான வரைவு நேற்று நாடாளுமன்றில் 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக் கப்பட்டிருந்த குறித்த பிரேரணை மீதான விவாதம் நேற்று முன்தினமும், நேற்றும் நாடாளுமன்றில் நடைபெற்றது.

அதன்பின்னர் நேற்று பிற்பகல் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவாக்க ளித்திருந்தனர்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலைமை வகித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நேற்றைய அமர்வில் கலந்துகொண்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, அரசின் பங்காளிக் கட்சிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜே.வி.பி. என்பன வாக்கெ டுப்பைப் புறக்கணித்திருந்தன.
பிரேரணைக்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 37 பேர் நடுநிலைமை வகித்ததுடன், 33 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Tags: , ,

Leave a Reply