யாழில் வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் ஒப்படைத்தால் பணப் பரிசு கொடுக்கப்படுமாம்.

shooting-gunஅபாயகரமான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வைத்திருப்பது ஆபத்தானது என தலைப்பிட்ட சுவரொட்டிகளை பாதுகாப்பு படையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரவலாக ஒட்டி வருகின்றனர்.

இச்சுவரொட்டிகளில் பாதுகாப்புப் படையினர் என அடிக்குறிப்பு இடப்பட்டுள்ளது.துப்பாக்கிகள் அல்லது அவற்றின் உதிரிப் பாகங்கள் மற்றும் பிற ஆயுத உபகரணங்கள், வெடிபபொருட்கள் வைத்திருப்பது சட்டவிரோதமானது.

அவற்றை யாராவது வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் வாட நேரிடும். இதனால் குடும்பம், பிள்ளைகள் வறுமையில் வாடுவார்கள். எனவே, நீங்கள் கண்டெடுத்த துப்பாக்கிகள், வெடிபொருட்கள் அல்லது ஏதேனும் ஆயுத உபகரணங்கள் உங்கள் வசமிருந்தால் அல்லது அவற்றை உங்கள் வதிவிடத்தில் அல்லது அண்மை பிரதேசத்தில் கண்டால் உடனடியாக தயக்கமின்றி அருகிலுள்ள பாதுகாப்பு படைகளின் முகாமில் அல்லது பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்தி அவற்றுக்கான வெகுமதியை பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொருட்கள் ஒவ்வொன்றுக்குமான வெகுமதி:

ரி- 56 ரக தப்பாக்கி 5000 ரூபாய்

கைத்துப்பாக்கி 2500 ரூபாய்

தற்கொலை அங்கி 10000 ரூபாய்

கொட்டான் துவக்கு 1500 ரூபாய்

கவச எதிர்ப்பு கண்ணி வெடி 2500 ரூபாய்

கைக்குண்டு 1000 ரூபாய்

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி 5000 ரூபாய்,

அதற்கான செல் 1000 ரூபாய் கிளைமோர்- 2500 ரூபாய் கனரக அல்லது இலகுரக துப்பாக்கி 2500 ரூபாய் வெடிமருந்து கிலோவுக்கு 5000 ரூபாய் .. இது நல்ல பிசினஸ் போல இருக்கே …. பழைய இருப்பு பித்தளைக்கு பேசிச்சம்பழம்….

Tags: , ,

Leave a Reply