மோடி அரசின் நெருக்கடி.. சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ராஜினாமா!

chhattisgarh-governor-shekhமத்திய அரசின் நெருக்கடியால் சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

மத்தியில் மோடி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் ஆளுநர்களை மாற்ற முடிவு செய்தது.

இது தொடர்பாக உள்துறை செயலர் கோஸ்வாமி ஆளுநர்களிடமும் பேசினார். ஆனால் கர்நாடகா, கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநர்களான பரத்வாஜ், ஷீலா தீட்சித் மற்றும் ஜே.பி. பட்நாயக் ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி மட்டும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத் ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply