காதலியின் பிள்ளையை காலால் உதைந்தே கொன்ற 19 வயது காதலன் : பிள்ளையின் ஈரல் இரண்டாக பிளந்து இறந்தது !

baby-deadதனது காதலியின் பிள்ளையை காலால் உதைந்தே கொன்ற 19 வயது காதலன். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவம் ஒரு கொலை என பிரித்தானிய நீதிமன்றம் நேற்று (17) தீர்ப்பு வழங்கியுள்ளது. டீன் ஹாரிஸ் என்னும் 19 வயது இளைஞன் 29 வயதான சாரா என்ற பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

குறித்த இப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி அமீனா என்று ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 2 வயதான இச் சிறுமி படு சுட்டி. அடிக்கடி மண்ணில் விளையாடுவாள். இதனால் அவள் தன்னை அடிக்கடி அழுக்காக்கிக்கொள்ளுவாள். இதனைப் பொறுக்கமுடியாத இந்த இளைஞர் அடிக்கடி அவள் மேல் கோபப்படுவது வழக்கமாம். சம்பவ தினத்தன்று, அனீமா மண்ணில் விளையாடிவிட்டு வந்தவேளை காதலன் பொறுமை இழந்து 2 வயதே ஆனா அமீனாவை எட்டி பலமாக உதைத்துள்ளார்.

படு ஆவேசமாக இவர் உதைத்ததில் அச்சிறுமி மயங்கி விழுந்து பின்னர் வைத்தியசாலையில் இறந்தது. இச் சிறுமியின் மரணத்திற்கு காரணம் அவரது வயிற்றுப் பகுதியில் உள்ள ஈரல் இரண்டாகப் பிளந்தது தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், ஈரல் கலங்கிப்போவது என்று கூறுவார்கள்.

காதலன் இச்சிறுமியை ஓங்கி உதைந்ததன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டார் என்பது, நீதிமன்றில் நிரூபனமானது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு 2 வயதுக் குழந்தையை எவ்வாறு இப்படி எட்டி உதைய உங்களால் முடிந்தது என்று அவரைப் பார்த்து நீதிபதி கேட்டார். மெளனமாக இருந்தான் கொலையாளி. கோபத்தை அடக்க தெரியவேண்டும். இல்லையென்றால் கட்டுப்படுத்த தெரிந்திருக்கவேண்டும்.

Tags: , ,

Leave a Reply