மாட்டு இறைச்சி சாப்பிட்டதால் வந்த வினை: குடலில் 8 அடி நீள புழு

china-girlசீனப் பெண் ஒருவரின் குடலில் இருந்து 8 அடி நீளமான கொக்கிப் புழு ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்னர் அவர் ஆசிய நாடொன்றுக்கு சுற்றுலா சென்றதாகவும் பின்னர் அன் நாட்டில் , ஒரு நாள் தான் மட்டிறைச்சியை சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல உணவுகளை அவர் உண்டாலும் அன்றைய தினம் உண்ட மாட்டு இறைச்சி, அவ்வளவாக சமைக்கப்பட்டு இருக்கவில்லை என்று தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினு தான் அதனை உண்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த மாட்டு இறைச்சியினுள் இருந்த கொக்கிப் புழு ஒன்றின் முட்டை இவரது வயிற்றுக்குள் சென்று குஞ்சு பொரித்துள்ளது. பின்னர் அது சுமார் 8 அடி நீளமாக வளர்ந்து அவர் குடலில் தங்கியிருந்துள்ளது. அடிக்கடி வயிற்றோட்டம், வயிற்றில் வலி எடுத்தல், மற்றும் வாந்தி என்பன இருந்ததால் குறித்த இந்த சீனப் பெண் அடிக்கடி சுகயீனமுற்றார்.

லண்டனில் அவர் மருத்துவரை அணுகியவேளை மருத்துவர் இவருக்கு என்ன பிரச்சனை இருக்கும் என்று துல்லியமாக கண்டு பிடித்துவிட்டார். பின்னர் இதுபோன்ற கொக்கிப் புழுக்களுக்கு கொடுக்கும் மருந்தை கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் அது வெளியே வந்த பாடாக இல்லை. இதனால் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். அதன் பின்னரே அசைந்துகொண்டு இருக்கும் கொக்கி புழுவை கண்டுபிடித்தார்கள். பின்னர் அதனை அகற்றியவேளை அது சுமார் 8 அடி நிளமாக இருந்ததை பார்த்த மருத்துவர்கள் அசந்துபோனார்கள்.

Tags: , ,

Leave a Reply