இலங்கையில் பூரணமான சமய சுதந்திரம் காணப்படுகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இன சமூகத்தினரும் அவரவர் சமயங்களை சுதந்திரமான முறையில் வழிபாடு செய்வதற்கு இலங்கையில் பூரணமாக சுதந்திரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து இன சமூக மக்களும் சகோதரத்தடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டு மக்கள் பூரண சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் சில தரப்பினர் இந்த சமாதானத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையயில் இடம்பெற்ற சம்பவங்களின் மூலம் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடுமையான சாவல்களுக்கு மத்தியில் ஆயிரக் கணக்கானோரின் உயிர்த் தியாகத்துடன் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது எனவும், கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை கடும்போக்காளர்களுக்காக விட்டுக்கொடுக்கத் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்களை மேற்கொண்டு அதன் பொறுப்பினை அரசாங்கத்தின் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக் கதைகள் வதந்திகளை மக்கள் நம்பிவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். முரண்பாடுகளினால் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறான இனவாத சிந்தனைகளினால் பாரியளவில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரத்தினால் நாடு பின்னோக்கி நகர நேரிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
















