இலங்கையில் சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகம்

cell-simஇலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதிஇ திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே இவர் அவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 2 கோடி 3 லட்சம் ‘மொபைல்’ தொலைபேசிகள் உள்ளன இதில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையான தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி 2011இ 2012 களில் 34 லட்சமும்இ கடந்த வருடத்தில் 41 இலட்சமும் ‘மொபைல’ தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply