அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து போராட்டம்

protest5அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியல்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களும் இணைந்து இன்று காலை யாழ் அரசபேருந்து தரிப்பிடம் முன்னே கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இன, மத, மொழிப் பேதங்களைக் களைந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். இன நல்லிணக்கம் சிறுபான்மை இனத்தை அழிப்பதா?, அழிக்காதே அழிக்காதே சிறுபான்மையினர் சொத்துக்களை அழிக்காதே போன்ற கோஷங்களை மும்மொழியிலும் எழுதிப் பதாகைகளாகத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார்.

Tags: ,

Leave a Reply