குருமாற்றம் ஜனாதிபதிக்கு துப்பரவா கூடாதாம் நாட்டைவிட்டு போகும்படி ஜோதிடர்கள் ஆரூடம்

Mahinda-Horsகுரு பெயர்ச்சி இடம்பெற்று வரும் இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக நாட்டில் இருந்த வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருக்குமாறு ஜனாதிபதிக்கு சோதிடர்கள் எச்சரிப்புடன் கூடிய ஆலோசனையை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நேற்று காலை 8.31 மணிக்கு குரு பெயர்ச்சி இடம்பெற்றது. இந்த நிலையில், சோதிடர்களின் ஆலோசனையை பொருட்படுத்தாது ஜனாதிபதி நாடு திரும்பியதால் சோதிடர்கள் குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சியினால் ஏற்படும் பாதகங்களை தவிர்ப்பதற்காக 100 பிக்குமாருக்கு தானம் வழங்கி விட்டு, மாலைதீவு நாட்டுக்காவது சென்று சில நாட்கள் தங்கியிருக்குமாறு சோதிடர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகளில் ஜனாதிபதி எப்படியான தீர்மானங்களை எடுப்பார் என்பதை கணித்து கூறமுடியாதிருப்பதாக அலரி மாளிகையின் தகவல்கள் தெரிவித்தன

Tags: , ,

Leave a Reply