சென்னை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் எடுக்க அரும்பாடு படும் டக்ளஸ் தேவானந்தா.

daklas1986ம் ஆண்டு சென்னையில் உள்ள சூளைமேட்டில், இயந்திர துப்பாக்கி கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், டக்ளஸ் தேவானந்தாவை தமிழக பொலிசார் இன்றுவரை தேடிவருகிறார்கள். சம்பவ தினத்தன்று டக்ளஸ் மற்றும் அவரது சகாக்கள் சூளைமேட்டில் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டு 5 பேரைக் காயப்படுத்தினார்கள்.

பின்னர் அவர்களின் ஒருவர் இறந்துபோனார். இந்த வழக்கில் கைதான டக்ளஸ், பின்னர் சென்னையை விட்டு தப்பியோடி, இலங்கை சென்றுவிட்டார். தற்போது இலங்கையில் மகிந்தரின் அரவணைப்பில் அமைச்சராகவும் உள்ளார். அதனால் செய்த குற்றம் இல்லையென்று ஆகிவிடுமா ? சென்னை நீதிமன்றில் 1986 முதல் நிலுவையில் உள்ள வழக்கு டக்ளசுக்கு பெரும் தலையிடியாக உள்ளது. 1994ம் ஆண்டுவரை டக்ளஸ் சென்னை நீதிமன்றில் ஆஜர் ஆகாததால், அவருக்கு பிணையில்லாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரால் இந்தியா செல்லமுடியாத நிலை தோன்றியது.

இதனை தடுக்க டக்ளஸ் சமீபகாலமாக பல முயற்சிகளை எடுத்துள்ளார். சென்னையில் நடைபெறும் இந்த வழக்கில் தாம் வீடியோ மூலம் ஆஜராகி தனது பக்க நியாயத்தை சொல்ல விரும்புவதாக முதலில் அவர் கோரினார். இதனை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தற்போது ஒரு வக்கீலை வைத்து தனக்காக வாதாடி வருகிறார். அதன் பிரகாரம், தன்னை கைதுசெய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை முதலில் வாபஸ் பெறவேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் டக்ளஸ்.

இதனூடாக முன் ஜாமீன் ஒன்றை எடுத்து தான் இந்தியா சென்றால் முதலில் கைதாகாமல் இருக்க கடும் முயற்சிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். இந்த பாச்சா சென்னை நீதிமன்றில் பலிக்குமா என்று தெரியவில்லை..

Tags: , ,

Leave a Reply