பிரபாகரன் இருந்திருந்தால் எமக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது அளுத்கமவில் கதறி அழுத பெண்!

aluthgama-riotsஎன்னை நோக்கி ஓடி வந்த முஸ்லிம் தாய் ஒருவர் என் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எங்கே? அவர் இருந்திருந்தால் நாங்கள் இன்றைக்கு இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோமே? அவர் எங்கே என என்னைக் கேட்டது என்னை மிக உருக்கியது. என வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவெறித்தாக்குதலை கண்டித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் இடம்பெற்றது. அப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய அந்த உணர்ச்சிப் பெருக்கு மிக்க போராட்ட உணர்வு எவ்வாறு முஸ்லிம் மக்களையும் காவாந்து பண்ணியிருக்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply