கிரிக்கெட் வீரரின் மனைவியிடம் சில்மிஷம்… தொழிலதிபரின் மகன் கைது

shakib-al-hasan-300வங்கதேச கிரிக்கெட் வீர்ர் ஷாகிப் அல் ஹசனின் மனைவி உம்மி அகமது சிஷிரிடம் சில்மிஷம் செய்ததாக தொழிலதிபரின் மகன் ஒருவரை வங்கதேச போலீஸார் கைது செய்துள்ளனர். ஜூன் 15ம் தேதி இந்தியா, வங்கதேசம் இடையே நடந்த ஒரு நாள் போட்டியின்போது மிர்பூர் ஸ்டேடியத்தில் வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டாராம் அந்த நபர். இதையடுத்து ஷாகிப் அல் ஹசன் மிர்பூர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் போலீஸார், 23 வயதான ரஹீத் என்பவரைக் கைது செய்தனர். ரஹீத், பிரபல தொழிலதிபர் பஸ்லூர் ரஹ்மானின் மகன் ஆவார்

ரஹீத்துடன் மேலும் சிலரும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனராம். சம்பவத்தின்போது உம்மியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பலரை ஸ்டேடிய காவலர்களேப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஷாகிப் அல் ஹசனும் கூட சிலரை அடித்ததாகவும்

Tags: , , ,

Leave a Reply