பீச்சில் படுத்திருக்கும் சமந்தாவின் காலை சூர்யா தடவும் காட்சி… : வாயால் கெட்ட சமந்தா.

anjaan_stills002மகேஷ்பாபு நடித்த Nenokkadine படத்தின் விளம்பர போஸ்டர் ஒன்றில் மகேஷ்பாபுவின் பின்னால் நாய்க்குட்டி போல கதாநாயகி தவழ்ந்து போவது போல் ஒரு காட்சிக்கு நடிகை நடிகை சமந்தா கடும் கண்டனம் தெரிவித்து, தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இதனால் அந்த சமயத்தில் மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கும் சமந்தாவுக்கும் இடையே ஒரு டுவிட்டர் போர் நடந்தது. மகேஷ்பாபு கூட சமந்தா மீது கடும் கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தாவின் போஸ்டர் ஒன்றை மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தாக்கி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஞ்சான் படத்தின் போஸ்டர் ஒன்றில் சமந்தா ஒரு மரத்தின் மீது படுகிளாமரான உடையில் படுத்திருப்பது போன்றும், சூர்யா சமந்தாவின் கால்களை தொடுவது போன்றும் தற்போது வெளியாகியுள்ளது.

பெண்ணுரிமை பற்றி வாய்கிழிய பேசும் சமந்தா, ஆண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவாரா? இதுதான் பெண்மையின் லட்சணமா? என்று அதே டுவிட்டரில் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் சமந்தா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் இதுவரை எவ்வித கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply