சயீத் அலிகான், ரித்தேஷ் தேஷ்முக், பிபாஷா பாசு, தமன்னா ஆகியோர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் பாலிவுட் திரைப்படம் Humshakals. இந்த திரைப்படத்தின் முக்கிய புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொள்ள படத்தின் நாயகிகளில் ஒருவரான பிபாஷா பாசு மறுத்துவிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த படத்தின் நடித்த பிபாஷா பாசு, தன்னுடைய காட்சிகளில் பெருமளவில் எடிட்டிங்கில் கட் ஆகியிருப்பதை படத்தின் டப்பிங் செய்யும்போது தான் அறிந்து கொண்டதாகவும், இதற்கு காரணம் தமன்னாதான் என்றும் அவர் வெளிப்படையாகவே புகார் கூறினார். இயக்குனர் சாஜித் கானுடன் நெருக்கமாக பழகிய தமன்னா, அதன்பின்னர் அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனது கேரக்டரை சிறிதாக்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமன்னா, இயக்குனர் சாஜித்கான் தனது சகோதரர் போன்றவர் என்றும், தேவையில்லாமல் தன்மீது வீண்பழி போடுவதை நிறுத்தாவிட்டால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் என்றும் மிரட்டலாக அறிவிப்பு செய்ததால், பிபாஷா பாசுவிற்கும், தமன்னாவிற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் பிபாஷா பாசு Humshakals படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
















