காரைதீவு புதிய தவிசாளர் கோபிநாத், அவரது இல்லத்தில் இனிய பாரதிக்கு விருந்தோம்பல்!

fun-bharathiஅம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்திற்காக உழைத்தவர்களை புறந்தள்ளிவிட்டு வெற்றிலைச் சின்னத்துடன் இணைந்தவர்களையும், தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகளையும் உள்வாங்கும் நடவடிக்கையில் தமிழரசுக் கட்சி தலைமைகள் முனைப்புடன் செயற்படுகிறது.

கட்சி அரசியல் நடாத்தும் தமிழரசுக் கட்சி தந்தை செல்வா அவர்களின் கனவுகளை பொடிப்பொடியாக்கிவருவதுடன், தமிழரசுக் கட்சி செய்யும் பராபட்சமான நடவடிக்கையானது எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ளது

இவற்றின் ஒரு கட்டமாக காரைத்தீவு முன்னாள் தவிசாளர் மீது அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுகளை சாட்டியதுடன், நாங்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தெரிவித்துக் கொண்டு மகிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தமிழ் பிரதேசங்களில் அமுல்படுத்த எத்தனிக்கும் இவர்கள் கபடத்தனமாக தவிசாளர் பதவியைத் தட்டிப்பறித்துக் கொண்டு அற்பசொற்ப சலுகைகளுக்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நூற்றுக் கணக்கான தமிழர்களை வெள்ளைவேனில் கடத்தியும், சிலரை நேரடியாக சுட்டுக் கொன்றவர்களுடன், கைகுலுக்கி விருந்தோம்பலை நடாத்துகின்றனர்.

காரைதீவுச் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோபிநாத்தின் வீட்டுக்கு கடந்த திங்கக்கிழமை இரவு சென்ற கருணா ஒட்டுக்குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்திற்கான இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்ச கும்பலுக்கான இணைப்பாளர், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனிய பாரதி வாழ்த்துக் கூறியதுடன், கோபிநாத் வழங்கிய விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டுள்ளார்.

இதில் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் கிருஸ்ணமூர்த்தி தயாரெத்தின அமைச்சரின் இணைப்பாளராவார், முன்னாள் தவிசாளர் ஜீவராஜ், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான இளைஞர் அணியின் செயலாளர், ஜெயசிறீல் இவர் இனிய பாராதிக்கு வெற்றிலைக்கு ஆதரவாளராக இருந்தவர். அரச அதிகாரியும் ஊடகவியலாளருமான சகாதேவராஜன், வெற்றிலைக் கட்சியின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்தவர்கள் இதில் கலந்து கொண்டு தமிழர்களின் தேசியம் சுயநிர்ணயத்திற்கு எதிராக செயற்பட உறுதிபூண்டுள்ளனர்.

நாங்கள் தமிழரசுக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் எவரும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளருக்கு இதுவரையில் வாழ்த்து தெரிவிக்காத நிலையில்தான் ஒட்டுக்குழுவைச் சார்ந்தவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த உறுப்பினர்களைத்தான் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கடந்த மாதம் 18ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட போது சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்த துரோகக் கும்பலை சந்தித்து விட்டு நாங்கள் மக்களை சந்தித்து விட்டோம், மக்கள் புதிய தவிசாளரை நியமிக்க அனுமதி வழங்கி விட்டார்கள் என ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் வங்ரோத்து நிலையினால், தமிழர் போரட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களும், தமிழர்க்கு எதிரான சதிகாரர்களும், தமிழரசுக் கட்சிக்குள் உள்நுழைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் விருப்பத்திற்குரிய கட்சியான தமிழரசுக் கட்சியை அன்னியர்களிடம் தாரைவார்ப்பதற்கு அதன் தலைமைகளும் ஒரு சில புல்லூருவிகளும் தீவிரமாக செயற்படுகின்றன. இதற்கு அந்த மாவட்டத்தில் பிறந்து வசிப்பிடமாகக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் துணைபோவது அவர்களின் முற்போக்கான அரசியல் ஞானம் இல்லையென்பதை வெளிக்காட்டுகிறது.

காரைதீவுக்கான புதிய தவிசாளரை நியமிப்பதற்கு சிபாசு செய்தவர்கள், எதற்காக இவரை தெரிவு செய்தார் என்று தெரியவில்லை. உண்மையில், காரைதீவு முன்னாள் தவிசாளரை எப்படியாவது ஓரம்கட்டிவிட்டு, எவரையாவது அதற்கு அமர்த்த வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் உயர் பீடத்தினதும், அதன் உறுப்பினர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியுள்ளார்கள்.

ஏற்கனவே, நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளராக பிள்ளையான் குழுவைச் சேர்ந்த உறுப்பினரை தெரிவு செய்து பதவியில் அமர்த்தினார்கள். அதனை பலர் சுட்டிக்காட்டிய போதும், தமிழரசுக் கட்சி பேமாளிகள் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை. மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான இனிய பாரதியுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சில நிரந்தர நியமனங்களை பெற்றுக் கொள்ள முடியும் என புதிய தவிசாளரும் அவரை சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து பொதுமக்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றார்கள்.

ஆளுங்கட்சியில் உள்ள தமிழ் அமைச்சர்களினால் கூட தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் நிலையில், மாகாண சபை உறுப்பினரால் என்ன செய்ய முடியும். அதுமாத்திரமல்ல மத்திய மற்றும் மாகாண சபைகளினால் கிராம அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் நிதி கூட தமிழ் பிரதேசங்களுக்கு ஒழுங்காகச் சென்றடையாத நிலையில், தமிழ் மக்களுக்கான அரசியல் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு இவர்களினால் முன்னெடுக்க முடியும்.

ஒரு சிலர் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக தமிழ் மக்களின் மானம் மரியாதைகளை சிங்களப் பேரினவாத சக்திகளிடம் அடகுவைக்கின்றனர்.

இவ்வாறுதான் பாராளுமன்ற தேர்தலின் போது கட்சி மாறிய பியசேனவுக்கு அனுமதி வழங்காதீர்கள் என ஊர்ப்பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு அனுமதி வழங்கியதன் விளைவுதான் இன்று அம்பாறை மாவட்டதிற்கென ஒரு பிரதிநிதியின்றி அந்த மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply