ஐ.நா விசாரணையில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்; உதவிச் செயலரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

un-flagஐ.நா. விசாரணையில் இலங்கை அரசுக்கு எதிராகச் சாட்சியமளிக்கும் தமிழ் மக்களுக்கு உரியபாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஐ.நா. உதவிச் செயலரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக நேற்றுக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோவுக்கும் இடையில் நேற்று ஒன்றரை மணி நேரம் கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பி லேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. இந்த விசாரணையின் போது, இலங்கை அரசினாலும், அதன் இராணுவத்தினராலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாட்சியமளிப்பதற்குத் தயாராகவுள்ளனர். ஆனால் இலங்கை அரசு, ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளதுடன், சாட்சிய மளிப்பவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது. இலங்கையின் அமைச் சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, சாட்சியமளிப்பவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்திருக்கின்றார்.

எனவே, ஐ.நா விசாரணையில் சாட்சியமளிக்கக் காத்தி ருக்கும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வலியுறுத்தினர்.

இருப்பினும் ஐ.நா உதவிச் செயலர் இது தொடர்பில் எது வித பதிலும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஐ.நா உதவிச் செயலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் அவருடன் மீண்டும் கலந்துரையாடல் நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply