கணேஷ் வெங்கட்ராமனுடன் நயன்தாரா நெருக்கம். ‘தனி ஒருவன்’ படப்பிடிப்பில் அம்பலமான உண்மை.

nayan-ganeshஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் திரைப்படம் “தனியொருவன்”. இதுவரை ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜா முதல்முறையாக சொந்தமாக கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தாலும், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நெருங்கிய நண்பராகவும் நடிக்கிறார். நட்புக்கும் காதலுக்கும் இடையே சிக்கி தவிக்கும் நயன்தாரா கேரக்டர் மிகவும் சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நெருங்கிய நண்பர்களாக நடிக்கும் நயன்தாரா மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் உண்மையிலேயே நெருங்கி பழகுவதாகவும் படப்பிடிப்பு குழுவினர் கூறுகின்றனர். இருவரும் ஷாட் முடிந்ததும் தனிமையில் பலமணி நேரம் பேசிக்கொண்டே இருக்கின்றார்களாம். இது எதில்போய் முடியும் என்று தெரியவில்லை என்கின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் இந்த படத்தில் உள்ள கெளரவ வேடம் ஒன்றுக்காக ஜீவா மற்றும் ஆர்யாவுடன் தொடர்பு கொண்டு கதை சொல்லி வருகிறாராம் ராஜா. இருவரின் ஒருவர் இந்த வேடத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply