சிறீதரனுக்கு மீண்டும் தொலைபேசி கொலை அச்சுறுத்தல்!

sritharan-mpகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.நேற்று சனிக்கிழமை மாலை தொலை பேசிமூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்கிறாயா? எனக்கூறி அடுத்த வாரம் உன்னை கொலை செய்வோம் என அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த தொலைபேசி மூல அச்சுறுத்தல் தொடர்பாக குறிப்பிட்ட இனம்தெரியாத நபரின் இலக்கத்தை குறித்து பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக மேலும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பேருவளை தர்க்கா நகரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை சி.சிறீதரன் இணைந்து நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply