இலங்கையில் மத வன்முறைகளின் பின்னணியில் இருப்பது யார் என அல்ஜசீரா தொலைக்காட்சி ஆராய்ந்துள்ளது. இலங்கையில் மூன்று முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு, மேலும் பலர் காயமடைந்த வன்முறைச் சம்பவங்களை பௌத்த குழு ஒன்று மேற்கொண்டிருந்தது. இதனை அடுத்து இலங்கை அரசாங்கம் அந்த பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தது.
அண்மையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளை தடுக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. எனினும் பொதுபல சேனாவுடன் அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இலங்கையை என ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
பௌத்த தீவிரவாத சக்திகளின் செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த வாரம் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கையின் 20 மில்லியன் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 10 வீதமாகும். எவ்வாறாயினும் இந்த வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இலங்கை மற்றுமொரு உள்நாட்டு போரை நோக்கி தள்ளப்படும் என அல்.ஜெசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
















