தமது முதலிரவை தல்செவனவில் கொண்டாடத் துடிக்கும் தமிழ் இளைஞர்கள்

thevasenaயாழ்ப்பாணத்தில் வந்து கலியாணம் செய்து தமது முதலிரவை படையினரால் பராமரிக்கப்படும் தல்செவன சுற்றுலா விடுதியில் கொண்டாட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்கள் விரும்புவதாகத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய ஹோட்டல்களிலும் பார்க்க உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தல்செவன ஹோட்டல் மற்றும் காரைநகரில் உள்ள படையினரின் பராமரிப்பில் உள்ள கோட்டை ஆகியவற்றில் அறைகள் எடுத்துத் தங்க வெளிநாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களும் தமிழ்க் குடும்பங்களும் விரும்புவதாக கனடாவில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதை விட உள்ளூர் வாசிகளும் தற்போது தமது நிகழ்வுகளுக்கும் சுவையான உணவுகளுக்கும் தல்செவனவை நாடுவதாகத் தெரியவருகின்றது.

Tags: , ,

Leave a Reply