ரூ.1 கோடி கேட்டு பெங்களூர் டாக்டரை மிரட்டிய பிரபல நடிகை. தப்பித்து சென்னை ஓட்டமா? பெரும் பரபரப்பு.

nayanakrishna-bangaloreபெங்களூரில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரை மிரட்டி ரூ.1 கோடி பணம் கேட்ட பிரபல கன்னட நடிகையை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் தற்போது சென்னையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

கன்னட மொழியில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை நயனா கிருஷ்ணா, ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவர் சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு பிரபல இயக்குனரை விழா மேடை ஒன்றில் செருப்பால் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

தற்போது பெங்களூரில் பிரபலமாக உள்ள டாக்டர் ஒருவருடன் நெருங்கிய பழகியதாகவும் அந்த சமயத்தில் மறைவான இடத்தில் கேமராவை எடுத்து வீடியோ எடுத்து, அந்த வீடியோவை வைத்து டாக்டரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ரூ.1 கோடி கேட்டு மிரட்டப்பட்டதால் டாக்டர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் மாறு வேடத்தில் டாக்டருடன் சென்று நயனா கிருஷ்ணாவின் கும்பலில் இருந்த இரண்டு பேர்களை பிடித்து கைது செய்துள்ளனர்.

நயனா கிருஷ்ணாவும் மற்றும் இரண்டு பேர்களும் தப்பித்து விட்டனர். அவர்கள் தற்போது சென்னையில் இருப்பதாக அவர்களுடைய மொபைல்போன் சிக்னல் தெரிவிப்பதாக பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply