மாலத்தீவில் ஹனிமூன்; கட்டில் முதல் கடற்கரை வரை படங்கள் வெளியிட்ட அமலாபால்

maladiv-amala2புதுமணத் தம்பதிகளான அமலாபால் இயக்குனர் விஜய் இருவரும் தங்களுடைய தேனிலவை மாலத்தீவில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து புகைப்படத்துடன் அமலாபால் ட்வீட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

உலகத்திலேயே மிக அழகிய பெரிய தீவு மாலத் தீவு, இங்கு தேனிலவு கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

மாலத்தீவில் தன் கணவர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தையும், அவர்கள் ஹனிமூனுக்காக ஏற்பாடு செய்திருந்த கட்டிலையும் படம் எடுத்த அமலாபால், அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் உடனே தங்கள் அபார கற்பனைத் திறனை ஆபாச கமெண்டுகளாக அள்ளித் தெளிக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்து அந்தப் படங்களே மோசமான தலைப்புகளுடன் பகிர ஆரம்பித்தனர்.

இது அமலாபாலை அப்செட்டாக்கிவிட்டது. ஆத்திரத்தில் ரசிகர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கினார் அமலா பால். ரசிகர்களும் சளைக்கவில்லை.

எனவே அந்த படங்களை அமலாபால் உடனே ட்விட்டரிலிருந்து நீக்கிவிட்டார். ஹனிமூன் கொண்டாட ஜாலியாக வந்த இடத்தில், இப்படி ஏழரையைக் கூட்டிவிட்டார்களே ரசிகர்கள் என்று புலம்பிய அமலாவை கணவர் விஜய் சமாதானப்படுத்தியுள்ளார்.

எதையுமே ப்ளான் பண்ணாம பண்ணினா இப்படிதான் நடக்கும்..

Tags: , ,

Leave a Reply