சாட்சியமளிப்போர் மீது சட்டநடவடிக்கை உயர் நீதிமன்றமே தீர்மானிக்க முடியும்:தயான் ஜயதிலக்க

maxresdefault_1சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றமே தீர்­மா­னிக்க முடியும். மாறாக அர­சாங்கம் கூறு­வ­தைப்­போன்று செயற்­ப­ட­மு­டி­யா­தென தெரி­வித்த ஐ.நா.வுக்­கான முன்னாள் வதி­வி­டப்­பி­ர­தி­நிதி கலா­நிதி தயான் ஜய­தி­லக்க வட­அ­யர்­லாந்தில் சம­அந்­தஸ்­துக்­காக போரா­டிய சிங் பெயின் அமைப்­பினை உதா­ர­ண­மாகக் கொண்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­ப­டு­வது சிறப்­பா­னது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவின் குழுவின் முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அர­சாங்­கத்­த­ரப்­பினர் பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

எம்மைப் பொறுத்­த­வ­ரையில் சர்­வ­தேச விசா­ர­ணைக்­குழு நாட்­டிற்குள் வருகை தரு­வதை நாம் எதிர்க்­கின்றோம். இருப்­பினும் தற்­போது விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நாட்­டிற்கு வெளி­யி­லி­ருந்­தா­வது விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே அதி­க­முள்­ளன.

குறித்த விசா­ர­ணைக்­கு­ழுவின் முன்­பாக சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அர­சாங்­கத்­த­ரப்பு கூறு­கின்­றது. மறு­பக்­கத்தில் சாட்­சி­யங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­க­வேண்­டு­மென தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக வலி­யுறுத்­தி­வ­ரு­வ­துடன் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கு­ழுவை நாட்­டிற்குள் அனு­ம­திப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப் பிரே­ர­ணைக்கு பிர­தான எதிர்க்­கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன வாக்­க­ளிக்­காத நிலையில் அதற்கு ஆத­ர­வா­கவும் கூட்­ட­மைப்பு வாக்­க­ளித்­துள்­ளது.

அவ்­வாறி­ருக்­கையில், சாட்­சி­ய­ம­ளிப்போர்மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதுதொடர்பில் உயர் நீதி­மன்­றமே தீர்­மா­னிக்­க­மு­டியும். அந்­த­வ­கையில், சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தனையும் வலி­யு­றுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அது­தொ­டர்பில் மூன்றாம் தரப்­பி­ன­ரிடம் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தனை நிறுத்­த­வேண்டும். கூட்­டமைப்பில் சிறந்த சட்­டத்­த­ர­ணிகள் காணப்­ப­டு­கின்­றார்கள். ஆகவே சாட்­சி­ய­ம­ளிப்­பது தொடர்பில் அவர்கள் உயர்­நீ­தி­மன்றில் மனு­வொன்றை தாக்கல் செய்து அத­னூ­டாக இப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றார்.

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­த­லை­முன்­னணி என்­பன சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஆத­ரவு வழங்­காத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் மட்டுமே ஆத­ரவு வழங்­கு­வ­துடன் தொடர்ச்­சி­யாக இரா­ணு­வத்­தினர் மீது குற்றம் சுமத்தும் கருத்­துக்­க­ளையும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இச்­செ­யற்­பா­டா­னது பெரும்பான்மை மக்கள் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் மனதில் தொடாச்­சி­யாக குரோ­த­மான உணர்வை வலுப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும் இதனால்மேலும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரிசல் நிலை­மையே ஏற்­படும்.

எனவே இவ்­வா­றான நிலை­மைகள் கைவி­டப்­ப­டு­வது மிகச்­சி­றந்த­தாகும். உதார­ண­மாக, வட அயர்­லாந்து பிரித்­தா­னி­யாவின் ஆதிக்­கத்­திற்கு உட்­பட்டி­ருந்த காலத்தில் அதனை மீட்­ப­தற்­கா­கவும், சம­அந்­தஸ்தைப் பெறு­வ­தற்­கா­கவும் பல போராட்­டங்­களும் முயற்­சிக்­களும் பல்­வேறு அமைப்­புக்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அதில் வட அயர்­லாந்­திற்கு சம­அந்­தஸ்­தினை பெறு­வதை இலக்­காகக் கொண்டு செயற்­பட்ட சிங் பெயின் எனப்­படும் இடது சாரிக்­கொள்­கையைக் கொண்ட அமைப்­பா­னது முக்­கிய இடத்தை வகிக்­கின்­றது.

இவ்­வ­மைப்­பா­னது பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தி­களைக் கொண்­டி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக சம அந்­தஸ்­தையும் ஜன­நா­ய­கத்­தையும் வலி­யு­றுத்தும் கருத்­துக்­க­ளை
யும் முன்­வைத்து வந்­தது. 1969ஆம் ஆண்டு வட­அ­யர்­லாந்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்களின் பின்னர் இரா­ணு­வத்தின் தலைமையில் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவை எதிர்த்­தனர். நல்­லி­ணக்கம் தொடர்­பாக அழுத்த­ம­ளித்­தனர். ஆனால் ஒரு­போதும் சர்­வ­தேச விசா­ர­ணை­யையோ அல்­லது தேசிய விசா­ரணை­யையோ கோரி­யி­ருக்­க­வில்லை.
அத­ன­டிப்­ப­டையில் தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்­பினர் குறித்த அமைப்பின் செயற்­பா­டு­களை உதா­ர­ணமாகக் கொண்டு செயற்­ப­டு­வ­துடன் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் முனைப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து மத்திய, மாகாண அரசுகளுக்கிடையில் காணப்படும் அதிகார வேறுபாடுகள் தொடர்பில் விரிவாக இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

யுத்தக்குற்றங்கள் தொடர்பாக மீண்டும் மீண்டும் பேசுவதால் எவ்விதமான நன்மைகளும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. காரணம் விடுதலைப்புலிகளும் யுத்தக்குற்றங்களை இழைத்துள்ளனர். ஆகவே மீண்டும் நாம் பின்னோக்கிச் சென்று பழையவிடயங்கள் தொடர்பில் பேசுவது யதார்த்தமற்றதொன்றாகும் என்றார்.

Tags: , ,

Leave a Reply