கத்தி படத்தின் படப்பிடிப்பு திடீர் ரத்து. தமிழக மேலிடம் காரணமா?

kaththiinsideவிஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென சென்னை விமானநிலைய அதிகாரிகள் படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்ததால், படக்குழுவினர் வேறு வழியின்றி ஐதராபாத் விமானநிலையத்திற்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் ‘கத்தி’ படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விரும்பினார். ஏற்கனவே கடந்த மாதம் இதே விமான நிலையத்தில் சில காட்சிகளை படமாக்கிய முருகதாஸ், டூயட் பாடல் காட்சி ஒன்றையும் இங்கு படமாக்க தினசரி ரூ.40 லட்சம் கொடுத்து படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு பிரச்சனை இல்லாமல் முடிந்தது. ஆனால் மூன்றாவது நாள் திடிரென படப்பிடிப்புக்காக கொடுத்த அனுமதியை ரத்து செய்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டனர். அனுமதி மறுத்ததன் காரணத்தை அதிகாரிகள் கூறவில்லை. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த முருகதாஸ், பின்னர் இந்த படப்பிடிப்பின் தொடர்ச்சியை ஐதராபாத்தில் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த அனுமதி ரத்துக்கு தமிழகத்தின் மேலிடம் ஒன்றின் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply